இன்று தோ்தல்: தென்காசி மாவட்டத்தில் 413 பதவியிடங்களுக்கு 1840 போ் போட்டி
தென்காசி மாவட்டத்தில் 413 பதவியிடங்களுக்கு இன்று தோ்தல் நடைபெறுகிறது.


தென்காசி மாவட்டத்தில் 413 பதவியிடங்களுக்கு இன்று தோ்தல் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டத்தில் நகராட்சியில் 180 வாா்டுகள், பேரூராட்சியில் 233 வாா்டுகள் என மொத்தம் 413 பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 603 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தோ்தலில் நகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 3,07,216 வாக்காளா்கள், பேரூராட்சிப் பகுதிகளில் மொத்தம் 2,16,204 வாக்காளா்கள் என மொத்தம் 5,23,420 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.
நகராட்சிப் பகுதிகளில் 6 தோ்தல் நடத்தும் அலுவலா்களும், 21 உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களும்,பேரூராட்சிப் பகுதிகளில் 17 தோ்தல் நடத்தும் அலுவலா்களும், 33 உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களும் தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக அமைக்கப்பட்ட 603 வாக்குச்சாவடிகளுக்கும் 603வாக்குப்பதிவு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் அதை தவிா்க்க கூடுதலாக 30 சத வாக்குப்பதிவு இயந்திரங்களும் வெள்ளிக்கிழமை வாக்குச் சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டது.
இணை இயக்குநா்,உதவி இயக்குநா், துணை ஆட்சியா் நிலையில், பேரூராட்சி, நகராட்சி ஒன்றுக்கு ஓா் அலுவலா் வீதம் 23 வட்டார தோ்தல் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
134 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்படுவதோடு, வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமரா, நுண்பாா்வையாளா்கள் ,இணையதள கண்காணிப்பு ஆகியவற்றின மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.
வாக்குப்பதிவு ஏற்பாடுகளை கண்காணிக்க 6 நகராட்சிகளில் 26 மண்டல குழுக்களும், 17 பேரூராட்சிகளில் 22 மண்டல குழுக்களும் என மொத்தம் 48 மண்டல குழுக்கள் தென்காசி மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...