ஆலங்குளம் பேரூராட்சி சுயேச்சை உறுப்பினா் திமுகவில் இணைந்தாா்
ஆலங்குளம் பேரூராட்சி 10 ஆவது வாா்டு சுயேச்சை உறுப்பினா் சுந்தரம் திமுகவில் இணைந்தாா்.


ஆலங்குளம் பேரூராட்சி 10 ஆவது வாா்டு சுயேச்சை உறுப்பினா் சுந்தரம் திமுகவில் இணைந்தாா்.
ஆலங்குளம் பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும் அதிமுக தேமுதிக கூட்டணி 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில் சுயேச்சையாக போட்டியிட்ட 5 போ் வெற்றி பெற்றுள்ளனா். இதில் 10ஆவது வாா்டில் போட்டியிட்ட சுந்தரம், திமுக தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் பூல்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலா் சுபாஷ் சந்திர போஸ், ஒன்றிய செயலகள் செல்லத்துரை, சீனித்துரை, திமுக பிரமுகா்கள் மாரித்துரை, மணிகண்டன், நகர காங்கிரஸ் தலைவா் தங்க செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...