ஆலங்குளத்தில் புழுதி பறக்கும் சாலையால் மக்கள் அவதி
ஆலங்குளத்தில் புழுதி பறக்கும் பிரதான சாலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.


ஆலங்குளத்தில் புழுதி பறக்கும் பிரதான சாலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக, திருநெல்வேலி - தென்காசி பிரதான சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்க படாமல் உள்ளது. இதனால் ஆலங்குளம் நகர எல்லைக்குள்பட்ட பகுதியில் பிரதான சாலை மிகவும் பழுதாகி போக்குவரத்திற்கு தகுதியற்ாக உள்ளது.
போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இந்த பிரதான சாலை, அண்மையில் பெய்த மழை காரணமாக குண்டும் குழியுமாக மாறி , நலிவடைந்த நிலையில் உள்ளது. மழைபெய்தால் சேறும், சகதியாவும் வெயில் அடித்தால் கடும் புழுதியாகவும் காட்சியளிக்கும் இந்த சாலையில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.
ஆலங்குளம் பகுதி வியாபாரிகள் இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் கண்டும் காணாமல் உள்ளனா். மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட பல்வேறு அலுவலா்கள் இந்தச் சாலை வழியே பயணம் செய்தும் இதற்கு விமோசனம் இல்லையா என பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனா்.
இந்நிலையில் இந்த சாலையில் செம்மண் கொட்டி மேடு பள்ளங்களை சீரமைக்கும் முயற்சியில் நெடுஞ்சாலை துறையினா் ஈடுபட்டுள்ளனா். ஏற்கனவே புழுதி பறக்கும் சாலையாக உள்ள நிலையில், தற்போது செம்மண் கொண்டு சீரமைக்கப்படுவதால், மேலும் புழுதியை கிளப்பி மூச்சுத்திணற வைப்பதாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனா். நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடைய சுமாா் 1 ஆண்டுக்கும் மேலாகும் நிலையில், அவசரகால உதவியாக ஆலங்குளம் நகர எல்லை பகுதியில் சிறப்பு நிதி ஒதுக்கி தாா் கொண்டு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...