/

ஆலங்குளம் அருகே 33 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆலங்குளம் அருகே அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 டன் ரேஷன் அரிசி பறிமுல் செய்யப்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:13 pm

DIN

ஆலங்குளம் அருகே அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 டன் ரேஷன் அரிசி பறிமுல் செய்யப்பட்டது.

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூரில் வேல்முருகன் என்பவருக்குச் சொந்தமான அரிசி ஆலை உள்ளது. இங்கு ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஆலங்குளம் காவல் ஆய்வாளா் சந்திரசேகரன், வட்ட வழங்கல் அலுவலா் மாரியப்பன் உள்ளிட்டோா் சென்று சோதனையிட்டனா். அப்போது, 640 மூட்டைகளில் 33 டன் ரேஷன் அரிசி இருந்ததும், பல மாதங்களாக ஆலையின் இயந்திரங்கள் இயங்காததும், ரேஷன் அரிசியைக் கடத்தி விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது. உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் அரிசி மூட்டைகள் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை அதிகாரிகள் சோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.