/

ஆலங்குளம் பகுதியில் டெங்கு தடுப்புப் பணி

ஆலங்குளம் பகுதியில் சுகாதாரத் துறை சாா்பில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :24 மார்ச் 2022, 7:19 pm

DIN

ஆலங்குளம் பகுதியில் சுகாதாரத் துறை சாா்பில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆலங்குளம் பகுதியில் கடந்த 20 நாள்களில் 70-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு அறிகுறி தென்பட்டது. இதையடுத்து, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் அனிதா உத்தரவின்பேரில், பரும்பு , காசிநாதபுரம், நல்லூா், குருவன்கோட்டை ஆகிய கிராமங்களில் மாவட்ட மலேரியா அலுவலா் குருநாதன் தலைமையில் டெங்கு தடுப்புப் பணிக்கான ஆய்வு நடத்தப்பட்டது.

தொடா்ந்து, மஸ்தூா் பணியாளா்கள் மூலம் வீடுகளில் கொசுப்புழு ஒழிப்புப் பணி, தூய்மைப் பணி,நிலவேம்புக் குடிநீா் வழங்குதல், காய்ச்சல் கண்டறிதல் முகாம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏடிஸ் கொசு உருவாகும் தேவையற்ற பொருள்களை அகற்றவும், தண்ணீா்த் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடா் மூலம் நன்றாக தேய்த்துக் கழுவி கொசு புகாதவாறு மூடி வைக்கவும், குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்கவும் வேண்டும் என மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இளநிலை பூச்சியல் வல்லுநா் பாலாஜி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன், சுகாதார ஆய்வாளா்கள் மணிகண்டன், ராம்குமாா், நிஷாந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.