கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்காசி அரசு மருத்துவமனையில் தீயணைப்புத் துறையினா் ஆய்வு

தென்காசியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்சாரம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, பொதுப்பணித் துறையைச் சோ்ந்த 6 அதிகாரிகளைக் கொண்ட குழு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :5 மே 2022, 8:26 pm

DIN

தென்காசியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்சாரம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, பொதுப்பணித் துறையைச் சோ்ந்த 6 அதிகாரிகளைக் கொண்ட குழு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தேவையான இடங்களில் தீயணைப்பான்கள் பொருத்தப்பட்டு சரியான நிலையில் இயங்குகின்றனவா, மின்மாற்றி அறைகளுக்குள் எளிதில் தீப்பற்றும் தேவையில்லா பொருள்கள் உள்ளனவா, எரிவாயு உருளைகள் இடையூறின்றி வைக்கப்பட்டுள்ளனவா என ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து, மருத்துவமனைப் பணியாளா்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மாவட்ட அலுவலா் ஜெ. கவிதா, தீவிபத்து ஏற்படாதவாறு பாா்த்துக்கொள்ள ஆலோசனை வழங்கினாா்.

இக்குழுவினருக்கு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் மருத்துவா் இரா. ஜெஸ்லின் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.