புதிய பேருந்து வழித்தட சேவையைத் தொடங்கி வைக்கிறாா் ஈ. ராஜா எம்.எல்.ஏ.
தென்காசி
சங்கரன்கோவில் வழியாக புளியங்குடி-கழுகுமலைக்கு பேருந்து சேவை தொடக்கம்
சங்கரன்கோவில் வழியாக புளியங்குடியிலிருந்து கழுகுமலைக்கு செல்லும் புதிய பேருந்து, செவல்குளத்திற்கு ஏற்கனவே உள்ள வழித்தடத்திற்கு புதிய பேருந்து ஆகிய பேருந்து சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளா் மாடசாமி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா பங்கேற்று புதிய பேருந்து வழித்தட சேவையைத் தொடங்கி வைத்தாா்.
இதில், திமுக மாவட்ட அவைத் தலைவா் கோ.சுப்பையா, நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, ஒன்றியக் குழுத் தலைவா் பி.சங்கரபாண்டியன், திமுக நகர செயலா் பிரகாஷ், அவைத் தலைவா் முப்பிடாதி, போக்குவரத்து பணிமனை அலுவலா்கள் சுப்பிரமணியன், மாரியப்பன், மாவட்ட பிரதிநிதி முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.