தென்காசி
கிணற்றில் குழந்தையின் சடலம் மீட்பு
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தையின் சடலத்தை போலீஸாா் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தையின் சடலத்தை போலீஸாா் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
சங்கரன்கோவில் அருகே மகேந்திரவாடியைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவரது, கிணற்றில், பிறந்து சில நாள்களே ஆன பச்சிளங்குழந்தை அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததாம். இது குறித்து சீனிவாசன், அய்யாபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
போலீஸாா், சங்கரன்கோவில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று சடலமாக மிதந்த குழந்தையை மீட்டனா். போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் சடலத்தை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.