பாளை. மத்திய சிறையில் சித்த மருத்துவ முகாம்:
பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. சுமார் 1000 சிறை


பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. சுமார் 1000 சிறைக் கைதிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டன.
பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு சித்த மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் கைதிகளுக்கு இலவச நிலவேம்பு குடிநீர் விநியோகத்தை திருநெல்வேலி மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி நல அலுவலர் முனீஸ்வரி, டெங்கு தடுப்பு சிறப்பு அலுவலர் சண்முகசுந்தரம், சித்த மருத்துவக் கல்லூரி பட்டமேற்படிப்பு மாணவர் ரமேஷ், அதிமுக மாநகர் மாவட்டச் செயலர் சுதா கே. பரமசிவம், பரணி சங்கரலிங்கம் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள், அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...