இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

"நீதிபதி பணிக்கு இளைஞர்கள் எளிதில் தேர்வாகலாம்'  

 திறம்பட சட்டம் பயின்ற இளைஞர்கள் நீதிபதி பணியிடங்களுக்கு எளிதில் தேர்வாகலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி கே. ராஜசேகர் குறிப்பிட்டார். 

Published On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

 திறம்பட சட்டம் பயின்ற இளைஞர்கள் நீதிபதி பணியிடங்களுக்கு எளிதில் தேர்வாகலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி கே. ராஜசேகர் குறிப்பிட்டார். 
திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா, கணினி மயமாக்கப்பட்ட நூலகம் திறப்பு விழா ஆகியவை புதன்கிழமை நடைபெற்றது. 
கல்லூரி முதல்வர் எஸ்.எம். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், கணினி மயமாக்கப்பட்ட நூலகத்தை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மை நீதிபதி பேசியது:
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். ஆனால், தற்போது நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற அளவுக்கு நூலகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வழக்குரைஞர் தொழிலில் போட்டி அதிகரித்துள்ளது. வழக்கை முறையாக நடத்தவில்லை எனில், வழக்குரைஞர் மீதே வழக்கு தொடரும் அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. முறையாக சட்டம் பயில்பவர்களுக்கு நீதித்துறையில் பல்வேறு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அண்மையில் நடைபெற்ற நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வுக்கு குறைந்த அளவில்தான் விண்ணப்பம் செய்திருந்தனர். திறம்பட சட்டம் பயின்றவர்கள் நீதிபதி பணியிடங்களுக்கு எளிதில் தேர்வாகும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.
பேராசிரியர்கள் எம். கிறிஸ்து ஜோதி, டி. ஜீவரத்தினம், கே.எஸ். சுந்தரராஜன், லட்சுமி விஸ்வநாத் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
உதவிப் பேராசிரியை பி. சண்முகப்பிரியா வரவேற்றார். நூலகர் ஆர். சேதுக்கரசி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.