ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரையிருப்பு கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் தேவை: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தச்சநல்லூர் அருகேயுள்ள கரையிருப்பில் தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:49 am

DIN

தச்சநல்லூர் அருகேயுள்ள கரையிருப்பில் தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கரையிருப்பு கிளைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கே.எஸ். பாலு தலைமை வகித்தார். மாநகரச் செயலர் செ. லெட்சுமணன், மாவட்டக்குழு உறுப்பினர் டேவிட் அப்பாத்துரை, மணிகண்டன், மாநகரக் குழு உறுப்பினர் தங்கையா, எஸ். கண்ணன் ஆகியோர் பேசினர். கிளையின் புதிய செயலராக பி. பரமசிவன், துணைச் செயலர்களாக வி. இருதயராஜ், சி. காலாங்கரையான் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தீர்மானங்கள்: சங்கர்நகர்-பாளையங்கோட்டை வரையில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கூடுதலாக பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். கரையிருப்பு தனியார் மில் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கவேண்டும். தெற்குத் தெருவில் உள்ள வாய்க்கால் பாலத்தைச் சீரமைக்கவேண்டும். ரேஷன் கடை கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும். கரையிருப்பு ரயில்வே கேட் அடிக்கடி பழுதாவதால் மாணவர்கள், நோயாளிகள் சிரமப்படுகிறார்கள். ஆகவே, சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். 
1ஆவது வார்டுக்குள்பட்ட பகுதியில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி பழுதாகி குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். இப்போது இயங்கி வரும் 37 ஜி பேருந்து வழித்தடத்தை திருநெல்வேலி சந்திப்பு, தச்சநல்லூர், சிதம்பரம்நகர், வேப்பங்குளம், மானூர் வரை இயக்க வேண்டும்.  2ஆவது வார்டு பகுதிகளில் தெருவிளக்குகளையும், சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.