பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

செங்கோட்டை-ராஜபாளையம் நான்குவழி சாலை கருத்துக் கேட்புக் கூட்டம் ரத்து: விவசாயிகள், பொதுமக்கள் கடும் வாக்குவாதம்

கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெறவிருந்த, செங்கோட்டை- ராஜபாளையம்

Published On :

கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெறவிருந்த, செங்கோட்டை- ராஜபாளையம் நான்குவழிச் சாலைக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு , இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் முதல் திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வரை நான்குவழிச் சாலை அமையவுள்ளது. இதுதொடர்பான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஒவ்வொரு வட்டத்திலும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, சிந்தாமணி, புளியங்குடி, மேலபுளியங்குடி, டி.என்.புதுக்குடி, சொக்கம்பட்டி, கடையநல்லூர், கம்பனேரி பகுதி 1, 2, வைரவன்குளம், மடத்துப்பட்டி, இடைகால், கிருஷ்ணாபுரம், காசிதர்மம், அச்சன்புதூர் ஆகிய கிராம மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (செப்.12) முற்பகல் 11முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
அப்போது கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஆறுமுகம், மண்டல துணை வட்டாட்சியர் ஏசுராஜன் ஆகியோர் முன்னிலையில், மத்திய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அலுவலர்கள் மக்களைச் சந்தித்து, கூட்டம் ரத்து செய்யப்பட்ட விவரத்தைக் கூறினர்.
அப்போது,  இந்த விவரத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தாதது ஏன் எனக் கேட்டு, விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நான்குவழிச் சாலை பெரும்பாலும் விவசாய நிலங்கள், குறிப்பாக தென்னந்தோப்புகள் வழியேதான் அமையவுள்ளதாகத் தெரிகிறது. இதனால், தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என, விவசாயிகள் ஆவேசத்துடன் பேசினர். அவர்களுக்கு துணை வட்டாட்சியர் ஆறுமுகம் விளக்கமளித்து சமாதானப்படுத்தினார்.
பாதிப்பு குறித்து மனுக்களாக எழுதி, நாகர்கோவில் அலுவலகத்துக்கு அனுப்புமாறு நெடுஞ்சாலைத் துறை ஆணைய அலுவலர்கள் தெரிவித்தனர். நான்குவழிச் சாலை அமையவுள்ள வழித்தடம், பகுதிகள் தொடர்பான வரைபடத்தின் நகல்களை பொதுமக்கள், விவசாயிகளிடம் அதிகாரிகள் வழங்கினர். இந்த வழித்தடம் உள்ள சர்வே எண் கொண்ட விவரப் பட்டியலும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.