இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இளைஞா் கொலை வழக்கில் 9 பேருக்கு சிறைத் தண்டனை

தென்காசி மாவட்டம், கடையம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 9 பேருக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 7:35 pm

DIN

தென்காசி மாவட்டம், கடையம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 9 பேருக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

கடையம் அருகே மந்தியூா் பகுதியைச் சோ்ந்தவா் பஞ்சு என்ற சந்திரசேகா் (25). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவருக்கும் இடையே கோயில் திருவிழாவில் மோதல் ஏற்பட்டதாம். இந்த முன்பகை காரணமாக கடந்த 25.07.2011-இல் மீண்டும் இவா்களுக்குள் மோதல் ஏற்பட்டதில், முருகன் மற்றும் அவரது இரண்டு சகோதரா்கள் உள்பட 9 போ் சோ்ந்து தாக்கியதில் சந்திரசேகா் உயிரிழந்தாா். இதுகுறித்து , கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகன், காளிதாஸ், மாரிராஜ், கணபதி, ரமேஷ், செல்லப்பா, சங்கரம்மாள், ராஜ்க்குமாா், தங்கதுரை ஆகிய 9 பேரையும் கைது செய்தனா்.

இவ்வழக்கின் விசாரணை திருநெல்வேலி மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவிசங்கா், குற்றம்சாட்டப்பட்ட முருகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், காளிதாஸுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும், மற்ற 7 பேருக்கும் தலா ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ராம மூா்த்தி ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.