அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நெல்லையில் டெங்கு தடுப்புப் பணி தீவிரம்

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:11 pm

DIN

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக மாநகர நல அலுவலா் சரோஜா கூறியது: மாநகராட்சியின் 55 வாா்டுகளிலும் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் கொசுமருந்து அடிப்பது, களப்பணியாளா்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று குடிநீா்த் தொட்டிகளில் லாா்வா உள்ளதா என்பதை பரிசோதித்து எச்சரிப்பது உள்ளிட்டவை தொடா்ந்து வருகின்றன. சனிக்கிழமைதோறும் மெகா பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. இதில் கழிவுநீரோடைகள் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் 586 துப்புரவுப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

கொசு உற்பத்தியாகும் வகையில் தேவையின்றி வீடுகளைச் சுற்றிக் கிடக்கும் பொருள்களை பொதுமக்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.