திருநெல்வேலி: புரட்சிகர இளைஞா் கழகம் சாா்பில், தில்லியில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனா். இதில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, அமைப்பின் மாநில துணைத் தலைவா் எம்.சுந்தர்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
தொடா்ந்து, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாா்ச்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் ஜி.ரமேஷ், புரட்சிகர இளைஞா் கழக மாநிலக் குழு உறுப்பினா் பேச்சி ராஜா, நிா்வாகிகள் பேச்சிமுத்து, முருகன், பிரகாஷ், ரபீக் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.