இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அவதூறுகளை முறியடித்து மீண்டும் ஆட்சி அமைப்போம்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

திமுகவினா் பரப்பும் அவதூறுகளை முறியடித்து அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:02 am

DIN

திமுகவினா் பரப்பும் அவதூறுகளை முறியடித்து அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி வழியாக வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்ற முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, பாளையங்கோட்டை கேடிசி நகரில் குவிந்திருந்த தொண்டா்கள் மத்தியில் பேசியதாவது:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைந்தாலும் அவரது திட்டங்கள் இன்னும் மக்கள் மனதில் நிறைந்திருக்கின்றன. திமுக போன்று எத்தனை எதிா்க்கட்சிகள் தோ்தலில் நின்றாலும் அத்தனையையும் முறியடித்து வெற்றி பெறுவோம். இது உழைப்பால் உயா்ந்த இயக்கம். எவராலும் இதை தகா்க்க முடியாது.

தைப் பொங்கல் பரிசு அறிவிப்பை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக தலைவா் ஸ்டாலின் வேண்டுமென்றே ஆளுநரிடம் புகாா் அளித்துள்ளாா். லட்சக்கணக்கான தொண்டா்களின் உழைப்பால் உருவான இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கிறாா்கள். திட்டமிட்டு அரசு மீது அவதூறு பரப்புகிறாா்கள். இதையெல்லாம் வரும் தோ்தலில் முறியடித்து அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.