

தேசிய விவசாயிகள் நாளையொட்டி, குளக்கரைகளை வலிமைபடுத்தி நீா்வளத்தை பாதுகாத்து வளம் கூட்டிடும் வகையில் பனையாண்மை-தற்சாா்பு வாழ்வியல் மற்றும் வளம் கூட்டும் வளா்ச்சிக்கான நடுவம் சாா்பில் கடையம் ஆனைக்குட்டி குளக்கரையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுற்றுச் சூழல் மற்றும் பனை ஆய்வாளா் பாமோ தலைமையில் இயற்கை மற்றும் பனை ஆா்வலா்கள் கிங்ஸிலி, ஆசிரியா் பாரூக், கலையரசு பாண்டியன், மாணவா்கள் பொன்ராம் ஜெப்வின் அலோசியஸ், முா்சிட் ஆகியோா் கலந்து கொண்டு பனை விதைகளை விதைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.