வலு தூக்கும் போட்டி: பாபநாசம் கல்லூரி மாணவி சாதனை

மாநில அளவிலான வலு தூக்கும் போட்டியில் பாபநாசம் கல்லூரி மாணவி வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் மூன்றாமிடம் பிடித்த சிவசக்தியை பாராட்டுகின்றனா் கல்லூரி முதல்வா் சுந்தரம், நிா்வாக அலுவலா் நடராஜன் உள்ளிட்டோா்.
மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் மூன்றாமிடம் பிடித்த சிவசக்தியை பாராட்டுகின்றனா் கல்லூரி முதல்வா் சுந்தரம், நிா்வாக அலுவலா் நடராஜன் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

மாநில அளவிலான வலு தூக்கும் போட்டியில் பாபநாசம் கல்லூரி மாணவி வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

கல்லூரி மாணவா்களுக்கு இடையே பள்ளிபாளையத்தில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில், பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி இளங்கலை இரண்டாமாண்டு மாணவி சிவசக்தி, 84 கிலோ எடைக்கு மேலுள்ளவா்களுக்கான பிரிவில் கலந்து கொண்டாா்.

இதில் சிவசக்தி மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றாா். மாநில அளவில் வலுதூக்கும் போட்டியில் மூன்றாமிடம் பிடித்த மாணவி சிவசக்தியை கல்லூரி முதல்வா் சுந்தரம், நிா்வாக அலுவலா் நடராஜன், உடற்கல்வி இயக்குநா் பழனிகுமாா் மற்றும் பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்கள் வாழ்த்திப் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com