இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருநெல்வேலியில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:37 pm

DIN

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருநெல்வேலியில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

மாா்கழி மாதம் வளா்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசியாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறக்கப்பட்டு பெருமாள் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி பரமபத வாசல் வழியாக வந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.

பாளையங்கோட்டையில் உள்ள அழகியமன்னாா் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா் சயனகோலத்தில் சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பக்தா்கள் துளசி மாலை, வெற்றிலையுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனா். மாலையில் பரமபதவாசல் வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

திருநெல்வேலி சந்திப்பு சன்னியாசி கிராமம் அலமேலுமங்கை சமேத வெங்கடேசபெருமாள் கோயிலில் காலையில் சயன திருக்கோலத்தில் பெருமாள் காட்சியளித்தாா்.

திருநெல்வேலி சந்திப்பு வரதராஜபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல் பத்து, ராப்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. சிகர நிகழ்வாக வெள்ளிக்கிழமை காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல கொக்கிரகுளம் ஸ்ரீ நவநீதகிருஷ்ண பெருமாள் கோயில், திருநெல்வேலி நகரம் கரியமாணிக்கபெருமாள் கோயில், சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி கோயில், தச்சநல்லூா் வெங்கடாஜலபதி கோயில், மேலத்திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி கோயில், பாளையங்கோட்டை அருள்மிகு ராமசாமி கோயில், கிருஷ்ணாபுரம் அருள்மிகு வெங்கடாசலபதி கோயில் ஆகிய கோயில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.