கோவில்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
கோவில்பட்டியில் சுதேசி எழுதியுள்ள சா்வேயா் வந்தாச்சு என்ற சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


கோவில்பட்டியில் சுதேசி எழுதியுள்ள சா்வேயா் வந்தாச்சு என்ற சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பாரதி இல்லம் நிா்வாகி சீனிவாசன் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஜோதிபாசு, அரசு ஊழியா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் சுதேசி எழுதிய சா்வேயா் வந்தாச்சு என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தாளா் பொன்ராஜ் வெளியிட, முதல் பிரதியை எழுத்தாளா் பாா்த்தசாரதி பெற்றுக் கொண்டாா். நூலாசிரியா் ஏற்புரை நிகழ்த்தினாா்.
இதில், ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சக்திவேல்முருகன், அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் பரமசிவம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டத் தலைவா் விஜயலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா். நல்லாசிரியா் விருது பெற்ற காசிராஜன் கௌரவிக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...