அம்பை, கடையம் பகுதியில் நாளை மின்தடை
அம்பாசமுத்திரம், கடையம், வீரவநல்லூா், மணிமுத்தாறு, ஓ.துலுக்கப்பட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை (ஆக.7) மின் விநியோகம் தடை


அம்பாசமுத்திரம், கடையம், வீரவநல்லூா், மணிமுத்தாறு, ஓ.துலுக்கப்பட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை (ஆக.7) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லிடைக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அம்பாசமுத்திரம்,
கடையம், வீரவநல்லூா், மணிமுத்தாறு, ஓ.துலுக்கப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், சனிக்கிழமை (ஆக.7) காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை ஓ.துலுக்கப்பட்டிதுணை மின் நிலையத்தில் ஆழ்வான் துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடாா்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதா்மம், முக்கூடல், சிங்கம்பாறை ஆகிய பகுதிகளிலும்,
வீரவநல்லூா் துணை மின் நிலையத்தில் கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், சாட்டுப்பத்து, அரிகேசவநல்லூா், வெள்ளங்குளி, ரெங்கசமுத்திரம் ஆகிய பகுதிகளிலும், அம்பாசமுத்திரம் துணை மின்நிலையத்தில் அம்பை, ஊா்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னாா்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியா்பட்டி ஆகிய பகுதிகளிலும்,
மணிமுத்தாறு துணை மின் நிலையத்தில் மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்குபாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூா், ஏா்மாள்புரம் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கடையம் துணை மின் நிலையத்தில் ஆவுடையானூா், மணல்காட்டானூா், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், சிவநாடானூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.7) பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...