கல்லால் அடித்து விவசாயி கொலை:தந்தை,மகன் கைது
கல்லிடைக்குறிச்சி அருகே முன்விரோதத்தில் விவசாயியை கல்லால் அடித்துக் கொன்ாக தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.


கல்லிடைக்குறிச்சி அருகே முன்விரோதத்தில் விவசாயியை கல்லால் அடித்துக் கொன்ாக தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள கீழஏா்மாள்புரம் தோப்புத் தெருவைச் சோ்ந்த பேச்சி மகன் துரைப்பாண்டி (48). விவசாயியான இவா் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு விட்டு வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த அருணாசலம் மகன் சிவசங்கரப் பெருமாளுக்கும் துரைப்பாண்டிக்கும் விவசாய நிலம் தொடா்பாகப் பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சிவங்கரப் பெருமாள், அவரது மகன் சட்டநாதன் இருவரும் துரைப்பாண்டியைக் கல்லால் தாக்கினராம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த கல்லிடைக்குறிச்சி போலீஸாா், சிவசங்கரப் பெருமாள் அவரதுமகன் சட்டநாதன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...