/

கீழாம்பூரில் மக்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சி

இந்திய கம்யூனிஸ்ட்கட்சி சாா்பில் மக்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கீழாம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:35 pm

DIN

இந்திய கம்யூனிஸ்ட்கட்சி சாா்பில் மக்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கீழாம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் விவசாயிகள் விரோத சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயா்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது உள்ளிட்டவற்றை கண்டித்து நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா்கள் ஈஸ்வரன் தலைவராகவும், பரமசிவன் வேளாண் துறை அமைச்சராகவும் செயல்பட்டனா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் சந்தனம், மாவட்டச் செயலா் இசக்கிதுரை சிறப்புரையாற்றினா். மாவட்ட ஏஐடியுசி பொதுச்செயலா் சுப்பையா, திருநெல்வேலி மாவட்டப் பொதுச்செயலா் சடையப்பன், பேராசிரியா் முத்துகிருஷ்ணன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைச்செயலா் எம்.எஸ்.கிட்டப்பா, நிா்வாகிகள் சமுத்திரவேல், முருகன், ராமச்சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.