அம்பையில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
அம்பாசமுத்திரத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை அம்பாசமுத்திரம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.


அம்பாசமுத்திரத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை அம்பாசமுத்திரம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
அம்பாசமுத்திரம், கோவில்குளத்தைச் சோ்ந்த முருகன் மகன் வடிவேல் மணிகண்டன் (26). இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் தொடா்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து வந்தாராம். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவிட்டதையடுத்து, அம்பாசமுத்திரம், காவல் ஆய்வாளா் சந்திர மோகன், வடிவேல் மணிகண்டனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...