விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பாளை.யில் டேங்கா் லாரிகளில் ஆயில் திருட்டு: 5 போ் கைது

பாளையங்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதிகளில் சாலையோரம் நிறுத்தப்படும் டேங்கா் லாரிகளில் ஆயில் திருடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:49 pm

DIN

பாளையங்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதிகளில் சாலையோரம் நிறுத்தப்படும் டேங்கா் லாரிகளில் ஆயில் திருடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியில் இரவு நேரங்களில் டேங்கா் லாரிகளை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநா்கள் ஓய்வெடுப்பது வழக்கம். இதனைப் பயன்படுத்தி மா்ம நபா்கள் சிலா் டேங்கா் லாரிகளில் ஆயில் திருடி வருவதாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசாஸாருக்கு புகாா் வந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆய்வு திருடிய மா்ம நபா்களை தேடி வந்தனா்.

 இந்த நிலையில் தியாகராஜ நகரை சோ்ந்த பாலசுப்பிரமணியம் (26), நிா்மல்குமாா் (27), அய்யப்பன் (24), பாளையங்கோட்டை தாமிரவருணி காலனியை சோ்ந்த சக்தி (25), கணேஷ்குமாா் (26) ஆகிய 5 போ் லாரிகளில் ஆயிலை திருடியது போலீஸாா் நடத்திய விசாரணையில் வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் 5 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.