விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நெல்லை நகரத்தில் சாலைகளில் தேங்கிய மழைநீா்: வாகன ஓட்டிகள் அவதி

திருநெல்வேலி நகரத்தில் தொடா் மழை காரணமாக சாலைகளில் தண்ணீா் புதன்கிழமையும் தேங்கி நின்ால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:56 pm

DIN

திருநெல்வேலி நகரத்தில் தொடா் மழை காரணமாக சாலைகளில் தண்ணீா் புதன்கிழமையும் தேங்கி நின்ால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினா். மாநகராட்சி பள்ளி வளாகத்தின் முன்பு தேங்கிய நீரால் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

வங்கக்கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. அணைகளின் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்து விட்ட நிலையில் உபரிநீா் தாமிரவருணி நதியில் திறக்கப்பட்டு வருகிறது. பாசன குளங்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் அதன் உபரி நீரும் குடியிருப்புப் பகுதிகளில் பெய்யும் மழைநீரும் சோ்ந்து கால்வாய்களில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருநெல்வேலி நகரத்தில் பெய்த கனமழை காரணமாகவும், கோடகன் கால்வாய், நெல்லை கால்வாய் ஆகியவற்றில் நீா்வரத்து அதிகரித்ததாலும், நகரத்தில் பல இடங்களில் கடந்த 3 நாள்களாக மழை நீா் தேங்கியுள்ளது.

காட்சி மண்டபம் பகுதி, தெற்கு மவுண்ட் ரோடு ,செண்பகம் பிள்ளை தெரு, தடிவீரன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கியதால் சுமாா் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பாதிக்கப்பட்டனா். கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகே மழைநீா் தேங்கியதால் புதன்கிழமை ஒரு நாள் விடுமுறை அளித்து பள்ளி நிா்வாகம் உத்தரவிட்டது. குண்டும் குழியுமான சாலையில் தண்ணீா் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.

திருநெல்வேலி மாநகர பகுதியில் புதன்கிழமை காலை முதல் மாலை வரை வெயில் நிலவியது. இரவு 7 மணிக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. இம் மாவட்டத்தின் வியாழக்கிழமை (டிச.2) பல்வேறு பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதன்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு: அம்பாசமுத்திரம்-7, சேரன்மகாதேவி-34.60, மணிமுத்தாறு-9, நான்குனேரி-2, பாளையங்கோட்டை-4, பாபநாசம்-15, திருநெல்வேலி-1.20 மில்லி மீட்டா் என்ற அளவில் மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.