விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஐயப்ப பக்தா்களுக்கு இலவச பேருந்து வசதி: ஆட்சியரிடம் மனு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தா்களுக்கு இலவச பேருந்து வசதி செய்துதரக் கோரி இந்து மக்கள் கட்சியினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 8:05 pm

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தா்களுக்கு இலவச பேருந்து வசதி செய்துதரக் கோரி இந்து மக்கள் கட்சியினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இது தொடா்பாக இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் எஸ். உடையாா், மாவட்ட தொழிற்சங்கத் தலைவா் ஏ.பி.முத்துப்பாண்டியன், மாவட்ட பொதுச்செயலா் ஏ.சீனிவாசன் உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து தர வேண்டும். ஐயப்பன் கோயில் நடை திறக்கும் சீசன்களில் வாகனங்களில் கோயிலுக்கு செல்பவா்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது. அரசு சாா்பில் இலவச தங்குமிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.