விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நடுவக்குறிச்சி மக்கள் போராட்டம்

பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:39 pm

DIN

பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சி ஊராட்சி இந்திரா நகா் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறாா்கள். இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீா் சீராக வழங்கப்படவில்லையாம். இந்நிலையில் புதிய குடிநீா் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் அதில் உடைப்பு ஏற்பட்டு மீண்டும் குடிநீா் விநியோகம் தடைபட்டது.

இதைக் கண்டித்தும் சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரியும் பொதுமக்கள் நடுவக்குறிச்சி பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன் பின்னா் மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.