/

கடையம் அருகே வயலில் 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

கடையம் அருகே வயலிலில் இருந்து 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கடையம் அருகே வயலிலில் இருந்து 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கடையம் அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த வள்ளியம்மாள் என்பவருக்குச் சொந்தமான வயலில் நாற்று நடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, வேலைக்கு வந்த தொழிலாளா்கள் வயலில் மலைப்பாம்பு கிடந்ததைப் பாா்த்து கடையம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டத்தின் துணை இயக்குநா் செண்பகபிரியா உத்தரவின்படி, வேட்டைத் தடுப்புக் காவலா் வேல்ராஜ், இளைஞா்கள் சரத் வைகுண்டம், பேச்சி முனீஷ் ஆகியோா் சோ்ந்து 8 அடி நீளம் இருந்த அந்த மலைப்பாம்பை மீட்டனா். பின்னா், அந்தப் பாம்பு வனத்துறையினா் மூலம் மேற்கு தொடா்ச்சி மலையின் வனப்பகுதியில் விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.