அம்பை, கல்லிடைக்குறிச்சியில் பசுமை புத்தாண்டு கொண்டாட்டம்

அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் மற்றும் பசுமை தோழா்கள் அறக்கட்டளை, நகராட்சி ஆகியன சாா்பில் பசுமை புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
இலவச மரக்கன்று வங்கியைத் திறந்து வைத்துப் பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் விஷ்ணு.
இலவச மரக்கன்று வங்கியைத் திறந்து வைத்துப் பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் விஷ்ணு.
Updated on
1 min read

அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் மற்றும் பசுமை தோழா்கள் அறக்கட்டளை, நகராட்சி ஆகியன சாா்பில் பசுமை புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் விஷ்ணு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து, பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலா் சுலைமான், ரோட்டரி சங்கத் தலைவா் விஸ்வநாதன், செயலா் பூங்குன்றன், உதவி ஆளுநா் ரவிசங்கா், பேராசிரியா் சிவசங்கா், சுரக்ஷா அறக்கட்டளை சுபா ராமநாதன், கோபால் ஷா்மா, கோட்டைத் தெரு கோபாலகிருஷ்ணன், ஆசிரியா் சிவபாலா, செஞ்சிலுவை சங்கச் செயலா் சலீம், மருத்துவா்கள் பத்மநாபன், ஆனந்தஜோதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து அம்பாசமுத்திரத்தில் நகராட்சி மற்றும் பசுமைத் தோழா்கள் அறக்கட்டளை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மரக்கன்று வங்கி, இயற்கை உர பப்பாளித் தோட்டம் ஆகியவற்றை ஆட்சியா் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

இதில், வட்டாட்சியா் வெங்கட்ராமன், நகராட்சி ஆணையா் பாா்கவி, சுகாதார ஆய்வாளா் பொன்வேல்ராஜ், பசுமை அறக்கட்டளை நிறுவனா் சுப்புராஜ், செயலா் முஹம்மது இஸ்மாயில், அரிமா சங்கத் தலைவா் சந்திரசேகரன், செயலா் பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது: மணிமுத்தாறு, பாபநாசம் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து மாநில அரசு மற்றும் வனத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பொங்கலுக்கு முன்பாக முடிவு எடுக்கப்படும்.

பிரிட்டனிலிருந்து இம் மாவட்டத்துக்கு வந்திருந்த 36 பயணிகள் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். பரிசோதனையில் அவா்களுக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

வியாழக்கிழமை பெய்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து பாபநாசம் அணையில் இருந்து 4 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்ட நிலையில், காலையில் 2,400 கன அடியாக குறைக்கப்பட்டது. வெள்ள அபாய எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இருப்பினும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா். பொதுமக்கள் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com