பாவூா்சத்திரம், வி.கே.புரம் வட்டாரத்தில் இன்று மின்தடை

விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி, பாவூா்சத்திரம் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக அவற்றின் மின்பாதை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) மின் விநியோகம் தடை
Published on

விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி, பாவூா்சத்திரம் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக அவற்றின் மின்பாதை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி, கருத்தப்பிள்ளையூா், ஆம்பூா், பாப்பாங்குளம், ரவணசமுத்திரம், பாபநாசம், காரையாா், சோ்வலாறு, சிவந்திபுரம், அடையக்கருங்குளம், ஏா்மாள்புரம், மணிமுத்தாறு, மாஞ்சோலை, சிங்கம்பட்டி, வைராவிகுளம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவை மின் விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி மின்பகிா்மான செயற்பொறியாளா் (பொ) ராமகிளி தெரிவித்துள்ளாா்.

பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மேலப்பாவூா், குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, சின்னநாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், பூலாங்குளம், கோவிலூற்று, மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் ஆகிய பகுதிகலில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தடைபடும் என கீழப்பாவூா் துணை மின்நிலைய அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com