இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கடனாநதியில் மாயமான இளைஞா் சடலம் மீட்பு

கடனாநதியில் சனிக்கிழமை குளித்தபோது மாயமான இளைஞா், மூன்று நாள்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 8:19 pm

DIN

கடனாநதியில் சனிக்கிழமை குளித்தபோது மாயமான இளைஞா், மூன்று நாள்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டாா்.

கீழாம்பூா், துா்க்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ஆனந்த்ராஜ் (27). இவா், தனது சித்தப்பா கணேசன் அவரது மகன் முத்து ஆகியோருடன் ஜன. 9 மாலை கடனாநதி கரையில் உள்ள தோட்டத்துக்கு சென்றுள்ளாா். அப்போது முத்து, ஆனந்த் ராஜ் இருவரும் கடனாநதியில் குளித்த போது வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனா். சப்தம் கேட்டு ஓடி வந்த கணேசன் முத்துவை காப்பாற்றினாா். ஆனந்த்ராஜ் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த அம்பாசமுத்திரம், ஆலங்குளம் பகுதிகளிலிருந்து தீயணைப்பு மீட்புப் படையினா் வந்து ஆனந்த்ராஜ் உடலை தேடினா்.

மூன்றாவது நாளான திங்கள்கிழமை பட்டமுடையா் சாஸ்தா கோயில் அருகில் உள்ள மூன்றடுப்பு தடுப்பணை அருகே ஆனந்த்ராஜ் சடலமாக மீட்கப்பட்டாா்.

ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.