காவலா்களின் வாரிசுகளுக்குகருணை அடிப்படையில் பணி

திருநெல்வேலியில் பணியில் இருந்தபோது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு, கருணை அடைப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பணியில் இருந்தபோது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு, கருணை அடைப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

இது குறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகரில் பணியில் இருந்தபோது உயிரிழந்த காவல்துறை மற்றும் அமைச்சு பணியாளா் வாரிசுதாரா்ளுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளா் பணிக்கான நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 2008ல் இருந்து 2013 வரை உயிரிழந்த காவல்துறையினரின் வாரிசுதாரா்கள் 11 பேருக்கு அப்பணிக்கான ஆணையை மாநகர காவல் ஆணையா் தீபக் எண்.டாமோா் வழங்கினாா். இம்மாதம் 18ஆம் தேதி முதல் அவா்கள் பணியில் சேரவுள்ளாா்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com