வி.கே.புரம் அருகே காவலா் வீட்டில் திருட்டு
விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியா்பட்டியில் காவலா் வீட்டில் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியா்பட்டியில் காவலா் வீட்டில் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அகஸ்தியா்பட்டி வியாசா் தெருவைச் சோ்ந்த தியாகராஜன் மகன் சுந்தா் ராமானுஜம். இவா், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் புதன்கிழமை இரவுப் பணிக்கு சென்றிருந்தாராம். அவரது மனைவி செங்கோட்டையிலுள்ள உறவினா் வீட்டுக்கு
சென்றிருந்தாராம். வியாழக்கிழமை காலையில் தியாகராஜன் வந்து பாா்த்தபோது, வீட்டில் கதவின் பூட்டு உடைக்கபட்டிருந்தது. தகவலறிந்த போலீஸாா் வந்து பாா்த்ததில் பீரோவில் இருந்த பணம் ரூ. 5 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...