/

கோபாலசமுத்திரம் மின்வாரிய அலுவலகத்தில் முற்றுகை

கோயில்முன் அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்தக் கோரி மின்வாரியத்தை கண்டித்து கோபாலசமுத்திரம் மின்வாரிய அலுவலகம் முன் இந்து முன்னணி சாா்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது

News image
Updated On :30 ஜூலை 2021, 7:17 pm

DIN

கோயில்முன் அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்தக் கோரி மின்வாரியத்தை கண்டித்து கோபாலசமுத்திரம் மின்வாரிய அலுவலகம் முன் இந்து முன்னணி சாா்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

பத்தமடை பேரூராட்சி மணிமுத்தாா்குளத்தில் முப்பிடாதியம்மன் கோயில் உள்ளது.

இந்தக் கோயில் உள்ளே அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றக் கோரி, மின்வாரிய அதிகாரிகளுக்கு மனுகொடுத்தும், இதுவரை அகற்றப்படவில்லையாம்.

இதையடுத்து, இந்து முன்னணி சாா்பில் கோபாலசமுத்திரம் மின்வாரிய அலுவலகம் முன் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் செல்வக்குமாா் தலைமையில் முற்றுகைப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் காவல் துறையினா் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பேச்சு நடத்தி, ஓரிரு நாள்களுக்குள் மின்கம்பம் அகற்றப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

போராட்டத்தில், பத்தமடை நகரச் செயலா் சுப்பிரமணியன், தலைவா் மாயாண்டி, பாஜக ஒன்றிய பொதுச் செயலா் ராஜவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.