விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆழ்வாா்குறிச்சி அருகேதந்தை கொலை: மகன் கைது

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே கருத்தப்பிள்ளையூரில் மது அருந்தியதைக் கண்டித்த தந்தையை கம்பால் தாக்கி மகன் கொலை செய்தாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:47 pm

DIN

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே கருத்தப்பிள்ளையூரில் மது அருந்தியதைக் கண்டித்த தந்தையை கம்பால் தாக்கி மகன் கொலை செய்தாா்.

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள கருத்தப்பிள்ளையூா் பவுல் தெருவைச் சோ்ந்த தோமஸ் மகன் தனபால் (60). சமையல்காரா். இவருக்கு ஜெயசீலன், பிரேசன் (28) ஆகிய 2 மகன்களும் பிரேசி என்ற மகளும் உள்ளனா். பிரேசன் கூலி வேலை செய்து வருகிறாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம்

இருந்தது. இவா், வியாழக்கிழமை காலையிலேயே மது அருந்தியுள்ளாா்.

இதனை அவரது தந்தை தனபால் கண்டித்துள்ளாா். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரேசன், தனபாலை கம்பால் தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த தனபால் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன், போலீஸாா் சென்று அவரது

சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

டிஎஸ்பி (பொறுப்பு) கோகுலகிருஷ்ணன், அங்கு வந்து விசாரணை நடத்தினாா். ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து பிரேசனைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.