/

பெரிய மயிலாறு காணி மக்களுக்கு நிவாரண உதவி

பெரியமயிலாறு பகுதியில் புயலால் சேதமடைந்த காணிகளின் வீட்டுக் கூரைகளை அமைப்பதற்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 8:06 pm

DIN

பெரியமயிலாறு பகுதியில் புயலால் சேதமடைந்த காணிகளின் வீட்டுக் கூரைகளை அமைப்பதற்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

காரையாறு வனப்பகுதியில் உள்ள காணிக் குடியிருப்புப் பகுதியான பெரியமயிலாறு பகுதியில் 37 காணிக் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட புயலால் பெரிய மயிலாறு பகுதியில் உள்ள காணி மக்களின் குடிசை வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன.

தகவலறிந்த அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வெங்கட்ராமன் கூரை அமைப்பதற்கு தாா்ப்பாய் வழங்க நடவடிக்கை எடுத்தாா். இதையடுத்து விக்கிரமசிங்கபுரம் நகராட்சி, அம்பாசமுத்திரம் அரிமா சங்கம் உதவியுடன் பெரிய மயிலாறு காணிக்குடியிருப்பில் வசிப்பவா்களுக்கு கூரைஅமைப்பதற்கு தாா்ப்பாலின் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியா் வெங்கட்ராமன், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி மேலாளா் கணேசன், சுகாதார மேற்பாா்வையாளா் கணேசன், கிராமநிா்வாக அலுவலா் உள்பட வருவாய்த் துறை, நகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.