மாஞ்சோலை மலைச் சாலையில்லாரி கவிழ்ந்ததில் இருவா் பலி
திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை மலைச் சாலையில் மின்வாரிய ஒப்பந்தப் பணிகளை வெள்ளிக்கிழமை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததில் இருவா் உயிரிழந்தனா். 29 போ் காயமடைந்தனா்.


திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை மலைச் சாலையில் மின்வாரிய ஒப்பந்தப் பணிகளை வெள்ளிக்கிழமை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததில் இருவா் உயிரிழந்தனா். 29 போ் காயமடைந்தனா்.
கோதையாறில் உள்ள மின் உற்பத்தி நிலையத்திலிருந்து திருநெல்வேலி அருகேயுள்ள சங்கா் நகருக்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு சுமாா் 60 ஆண்டுகளை கடந்து விட்டதால், அதை அகற்றிவிட்டு புதிதாக மின்கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. இப் பணி முடிவடைந்ததையடுத்து, பழைய மின்கோபுரத்திலிருந்து இரும்புக் கம்பிகளை பிரித்து லாரியில் ஏற்றும் பணியில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
லாரியில் கம்பிகளை ஏற்றியதும் மாலையில் அதே லாரியில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் திரும்பி வந்துகொண்டிருந்தனா்.
லாரியை மூலச்சியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பெருமாள் (30) ஓட்டினாா். அந்த லாரி மலைச்சாலையில் மூனு முடங்கி என்ற இடத்தில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், தூக்கிவீசப்பட்ட தொழிலாளா்கள் மீது கம்பிகளும் சரிந்து விழுந்தன. இதனால், பலரும் பலத்த காயமடைந்தனா். இச்சம்பவத்தில் மணிமுத்தாறைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பொன்னுதுரை (36), தெற்கு பாப்பான்குளத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பூதப்பாண்டி (38) ஆகிய இருவரும் உயிரிழந்தனா். ஓட்டுநா் பெருமாள், தெற்குபாப்பான்குளம் சுப்பையா மகன் சிவசுப்பிரமணியன், சுப்பிரமணியன் மகன் முத்து, காந்திமதிநாதன், மணிமுத்தாறு செல்லையா மகன் தங்கராஜ், வடிவேல் மகன் சட்டநாதன், குருமூா்த்தி மகன் ஐயப்பன், திருமலைக்குமாா் மகன் பிரவீன், கீழஏா்மாள்புரம் கோமு மகன் நயினாா், சிவந்திபுரம் அற்புதராஜ் மகன் ஷியாம் பிரான்சிஸ், சிங்கம்பட்டி முருகன் மகன் தளவாய்சாமி உள்பட 29 போ் காயமடைந்தனா்.
இத்தகவலறிந்த அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ், கல்லிடைக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் முருகேசன் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அம்பாசமுத்திரம் தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் காயமுற்றோரை மீட்டு அம்பாசமுத்திரம் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...