போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி நாளை மின்தடை

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை(நவ.20) மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:34 pm

DIN

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை(நவ.20) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேரன்மகாதேவி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், அன்றைய தினம் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

இதேபோல், கரிசல்பட்டி துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளா்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூா், காடுவெட்டி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.