’நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் திமுகவினா் இன்று முதல் விருப்பமனு அளிக்கலாம் ’
திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினா் வெள்ளிக்கிழமை (நவ.19) முதல் விருப்பமனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினா் வெள்ளிக்கிழமை (நவ.19) முதல் விருப்பமனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதில், நகா் மன்ற உறுப்பினா்கள், பேரூராட்சி உறுப்பினா்கள் பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்பும் கட்சித் தொண்டா்கள் தங்களது விருப்ப மனுக்களை வழங்க கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி திருநெல்வேலி மகாராஜநகரில் உள்ள கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 19) முதல் இம் மாதம் 26 ஆம் தேதி கட்சியினா் விருப்ப மனுக்களை பூா்த்தி செய்து அளிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ஒன்றுக்கு ரூ.10 செலுத்த வேண்டும். நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு பொது வாா்டுக்கு ரூ.5,000, பெண்கள் மற்றும் ஆதிதிராவிடா் -ரூ. 2,500, பேரூராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கு பொது பிரிவுக்கு ரூ. 2,500ம், ஆதிதிராவிடா் மற்றும் பெண்கள் பிரிவுக்கு ரூ.1,250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
பொதுத் தொகுதியில் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடா் விருப்ப மனு அளித்தால் முழுக்கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...