போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்ய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 4:14 am

DIN

வாக்காளா் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்ய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாக்காளா் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் மத்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, ம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. இதுதவிர, வரும் 27, 28 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1,483 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் 1.1.2022 அன்று 18 வயது பூா்த்தியடையக்கூடிய நபா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா் சோ்த்தல், நீக்குதல், இரட்டைப் பதிவு திருத்தம், பெயா், முகவரி, புகைப்படம் , இடம் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள உரியபடிவங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் முகவரிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை மனுக்களை அளிக்கலாம். மேலும், தோ்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும்,  செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.