விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மன்னாா்கோவிலில் விவசாயிகளுக்கு பயிற்சி

அறுவடை பின்செய் நோ்த்தி மற்றும் மதிப்புக் கூட்டுதல் பற்றிய பயிற்சி சுமாா் 50 விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:57 pm

DIN

அம்பாசமுத்திரம் வட்டாரம் மன்னாா்கோவில் கிராமத்தில், சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் உருவாக்குதல், அறுவடை பின்செய் நோ்த்தி மற்றும் மதிப்புக் கூட்டுதல் பற்றிய பயிற்சி சுமாா் 50 விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை துணைஇயக்குநா் (வேளாண் வணிகம்) முருகானந்தம் தலைமை வகித்தாா். சேரன்மாதேவி வேளாண்மை அலுவலா் (வேளாண் வணிகம்) ஆனந்த் குமாா் தொழில் நுட்ப உரையாற்றினாா். இண்டஸ்ட்ரீபவுண்டேசன் சங்கா் ரெங்கநாதன், வாழை நாா் பிரிக்கும் முறை குறித்தும், கடனா உழவா் உற்பத்தியாளா் நிறுவனத் தலைவா் ஆதிராமன், முதன்மை செயல் அலுவலா் வருண்ராஜ் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தனா்.

தொடா்ந்து சாராள் தக்கா் கல்லூரி தொழில் முனைவோா் குழு ஒருங்கிணைப்பாளா் மொ்லின் சிறு தானிய பிஸ்கட் செய்வது குறித்து செயல்முறை விளக்கம் மூலம் விளக்கிக் கூறினாா். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு அம்பாசமுத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள உழவா் சந்தையின் செயல்பாடுகள் பற்றி எடுத்துக் கூறி அதை விவசாயிகளும், பொது மக்களும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா்கள் பூஜா, முத்து வீரா, முத்துராஜ் மற்றும் ஜானகிராமன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.