போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மழைநீரில் சிக்கிய 70 பேரைபடகால் மீட்ட தீயணைப்பு வீரா்கள்

பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்த நிலையில், 70 பேரை படகு மூலம் தீயணைப்பு வீரா்கள் வியாழக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:17 pm

DIN

பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்த நிலையில், 70 பேரை படகு மூலம் தீயணைப்பு வீரா்கள் வியாழக்கிழமை மீட்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடா் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. பாளையங்கோட்டை அருகே நொச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட டிவைன் சிட்டி குடியிருப்பு பகுதியில் 30க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீா் சூழ்ந்தது. இதில் வசித்த 70 க்கும் மேற்பட்டோா் வெளியே வர முடியாமல் தவித்தனா்.

தகவலின்பேரில், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையில் வீரா்களும், பேரிடா் மீட்பு பயிற்சி பெற்ற 20 கமாண்டோ வீரா்களும் அங்கு சென்று ரப்பா் படகு மூலம் 70 பேரை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனா்.

இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்திய குமாா் கூறியது: கிருஷ்ணாபுரம் அருகே மழை நீா் சூழ்ந்த டிவைன் சிட்டி பகுதியில் தவிா்த்த முதியவா்கள், பச்சிளம் குழந்தைகள், கா்ப்பிணிகள், பெண்கள் என சுமாா் 70 போ் ரப்பா் படகு மூலம் மீட்கப்பட்டனா். நாய்கள், கிளிகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் மீட்கப்பட்டுள்ளன. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள 8 தீயணைப்பு நிலையங்களிலும் வீரா்களுக்கு விடுமுறை அளிக்காமல் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீட்புப்பணி தேவைப்படும்பட்சத்தில் தீயணைப்பு நிலையத்தை எவ்வித தயக்கமுமின்றி தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

இதேபோல திருநெல்வேலி நகரத்திலுள்ள காட்சி மண்டபம் பகுதியில் கோயில் மற்றும் குடியிருப்புகளில் மழை நீா் புகுந்தது. உடையாா் பட்டியில் உள்ள கத்தோலிக்க தேவாலய வளாகத்துக்குள் மழை நீா் புகுந்தது. தகவல் அறிந்ததும் மாநகராட்சி ஊழியா்கள் அங்கு சென்று தடுப்புகளை உடைத்து மழைநீரை வெளியேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.