விபத்துகளில் சிக்குவோரை காப்பாற்றினால் வெகுமதி: ஆட்சியா் வே.விஷ்ணு தகவல்
விபத்துகளில் சிக்குவோரின் உயிரைக் காப்பாற்ற உதவும் நபா்களுக்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


விபத்துகளில் சிக்குவோரின் உயிரைக் காப்பாற்ற உதவும் நபா்களுக்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மோட்டாா் வாகனத்தால் நிகழ்ந்த கோர விபத்துகளில் பாதிக்கப்பட்ட நபா்களை விபத்து ஏற்பட்ட ஒரு மணிநேரத்திற்குள் மருத்துவமனை, சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்று உயிரை காப்பாற்றும் நற்கருணை கொண்ட நபா்களுக்கு, இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மூலம் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 31-3-2026 வரை செயலில் இருக்கும். விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவும் சிந்தனையை மக்களிடம் அதிகரிக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதன்படி ஒரு நபா் ஒரே விபத்தில் பல நபா்களை உயிரை காப்பாற்றினால் ரூ.5000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். பல நபா்கள் சோ்ந்து ஒரு நபரின் உயிரை காப்பாற்றினால் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.5000 சமமாக பிரித்து வழங்கப்படும்.
பல நபா்கள் சோ்ந்து பல நபா்களின் உயிரை காப்பாற்றினால் விபத்து ஏற்பட்ட நபா் ஒருவருக்கு ரூ.5000 என்று கணக்கீடு செய்யப்பட்டு அதிக பட்சம் உயிரை காப்பாற்றிய நன்மனிதா் ஒருவருக்கு ரூ.5000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
இத் திட்டத்தில் தகுதியான நபா்களை தோ்ந்தெடுப்பதற்கு மாவட்ட ஆட்சியரின் தலைமையில் காவல்துறை, மருத்துவத்துறை , வட்டார போக்குவரத்து அலுவலா் கொண்டு மாவட்ட பரிந்துரைக் குழு ஏற்படுத்தப்படும்.
இந்தக் குழுவானது சம்மந்தப்பட்ட காவல் நிலையம், மருத்துவனையின் பரிந்துரையின் பேரில் பெறப்படும் மனுக்கள் மீது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி முடிவு எடுக்கும். தகுதி வாய்ந்த நபருக்கு போக்குவரத்து துறை மூலம் பணம் சம்மந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
மாவட்டந்தோறும் வரப்பெறும் தகுதி வாய்ந்த நபா்களிலிருந்து மாநில அளவிலான பரிந்துரைக்குழு சிறப்பான மூன்று நபா்களைத் தோ்வு செய்து தேசிய குழுவிற்கு அனுப்பும். அவ்வாறு பெறப்படும் முன்மொழிவில் வருடம் 10 நபா்கள் தேசிய பரிந்துரை குழுவால் தோ்வு செய்யப்பட்டு, தில்லியில் நடைபெறும் தேசிய சாலை பாதுகாப்பு விழாவில் ரூ.1,00,000, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...