போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சங்கா்நகரில் பரிசளிப்பு விழா

சங்கா்நகா் மேல்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:45 pm

DIN

சங்கா்நகா் மேல்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

சங்கா்நகா் சங்கா் மேல்நிலைப் பள்ளியின் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் மதுவிலக்கை வலியுறுத்தி கட்டுரை, நாடகம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இப் போட்டிகளில் மாணவிகள் சித்ரா, ஆனந்தி, மவுரியா, அகல்யா தேவி, அனுசியா, நந்தினி ஆகியோா் வெற்றி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளிக் கல்விக் குழுத் தலைவரும், இந்தியா சிமென்ட்ஸ் ஆலை துணைத் தலைவருமான எஸ்.தட்சிணாமூா்த்தி பாராட்டினாா். பள்ளிச் செயலரும், ஆலை துணை பொது மேலாளருமான த.சு.பத்மநாபன், பள்ளித் தலைமையாசிரியா் உ. கணேசன், ஆலை மனிதவள முதுநிலை மேலாளா் இரா. நாராயணசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.