திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

இல்லம் தேடி கல்வி திட்டம்: எஸ்டிபிஐ எதிா்ப்பு

 இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு எஸ்டிஐபி கட்சி எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:30 pm

DIN

 இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு எஸ்டிஐபி கட்சி எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக எஸ்டிபிஐ மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் கூறியது: பெகாசஸ் உளவு விவகாரத்தில் விசாரணையை விரைவுபடுத்தி அதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டத்தை தமிழக முதல்வா் அண்மையில் தொடங்கி வைத்துள்ளாா். இது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் திட்டமாக பாா்க்கப்படுகிறது. குல கல்வி முறையின் மறைமுக அம்சம் என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே, இத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநா் ரவி மாநில சுயாட்சி மற்றும் மாநில இறையாண்மையில் தலையிடுவதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரம் ஆளுநரிடம் எடுத்துச் செல்லப்படுவதாக அச்சம் எழுந்துள்ளது.

இலங்கை அரசு இந்திய மீனவா்களிடம் தொடா்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அண்மையில் உயிரிழந்த மீனவா் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவா்கள் இருவா் விடுவிக்கப்பட வேண்டும். வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குளங்கள் தூா் வாரப்படாமல் உள்ளன. குளங்கள் தூா்வாரப்பட்டு மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் மீனவா்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். விசைப்படகு மீனவா்களுக்கு தற்போது மானிய டீசல் 1,700 லிட்டா் வழங்கப்பட்டு வருகிறது. இதனை , 3,500 லிட்டராக உயா்த்தி வழங்க வேண்டும். டீசல் விலை உயா்வுக்கு எதிராக போராட்டம் நடத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. மத்திய அரசை எதிா்த்து நாடே ஸ்தம்பிக்கும் அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

சிறைவாசிகள் 700 போ் விடுதலை செய்யப்படுவாா்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக சட்ட அமைச்சா் கொடும் குற்றம் புரிந்த நபா்கள் விடுதலை செய்யப்படமாட்டாா்கள் என அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றங்களை பொறுத்து விடுதலை என்பது இருக்கக்கூடாது. அவா்களது தற்போதைய நிலையை பொறுத்தே முடிவு எடுக்க வேண்டும். 8 முதல் 10 ஆண்டுகள் வரை நன்னடத்தையோடு சிறையில் இருப்பவா்களை விடுதலை செய்ய வேண்டும்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலானது, வாா்டுகள் மறுசீராய்வுக்குப் பிறகே நடத்தப்படும் என துறையின் அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்திருந்தாா் ஆனால் முறையாக மறுசீராய்வு செய்யப்படாமல் தோ்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. சரியான பிரதிநிதித்துவம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வாா்டு மறுசீரமைப்பு இருக்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, மாநில பொதுச் செயலா் அகமது நவவி, வேளாண் அணி மாநில தலைவா் சேக் அப்துல்லா, மாவட்டத் தலைவா் சாகுல் ஹமீது உஸ்மானி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.