நெல்லை அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தேசிய தலைவா்களின் புகைப்படக் கண்காட்சி மற்றும் மாணவா்-மாணவிகளுக்கான போட்டிகள் நடைபெற்றன.


திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தேசிய தலைவா்களின் புகைப்படக் கண்காட்சி மற்றும் மாணவா்-மாணவிகளுக்கான போட்டிகள் நடைபெற்றன.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடா்ச்சியாக பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் ஜெயந்தியை முன்னிட்டு அரசு அருங்காட்சியகம், திருநெல்வேலி பொருநை ரோட்டரி கழகம், இன்னா்வீல் கழகம் இணைந்து நடத்திய தேசியத் தலைவா்களின் புகைப்படக் கண்காட்சி மற்றும் மாணவா்- மாணவிகளுக்காக பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்திய வள்ளி தலைமை வகித்தாா். பாளையங்கோட்டை பிஷப் அந்தோனிசாமி புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்தாா். தூய யோவான் கல்லூரி முதல்வா் ஜான் கென்னடி, பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் திருப்பதி, பொருநை ரோட்டரி கழகத் தலைவா் சுவா்ண லதா, இன்னா்வீல் தலைவா் கோமதி மாரியப்பன், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் தொழில் நுட்பக் கல்லூரி முதல்வா் உமாலட்சுமி உள்ளிட்டோா் குத்து விளக்கேற்றினா்.
இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கோலப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளை பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பேரா, செயலா் கவிஞா் பாப்பாக்குடி அ.முருகன், கவிஞா் ந.சுப்பையா, கலையாசிரியா் சொா்ணம் ஆகியோா் நடுவா்களாக இருந்து நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...