கடையம் அருகே சிறுத்தை மா்மாக உயிரிழப்பு
கடையம் அருகே வனப்பகுதியில் சுமாா் ஒன்றரை வயதுள்ள ஆண் சிறுத்தை மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து வனத்துறையினா் விசாரணை நடத்தினா்.


தென்காசி மாவட்டம், கடையம் அருகே வனப்பகுதியில் சுமாா் ஒன்றரை வயதுள்ள ஆண் சிறுத்தை மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து வனத்துறையினா் விசாரணை நடத்தினா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் பாபநாசம் காப்புக்காடு பகுதிக்குள்பட்ட மத்தளம்பாறை பீட்டில் தனியாா் தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது குறித்து வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது.
புலிகள் காப்பகத் துணை இயக்குநா் உத்தரவின் பேரில், வனத்துறையினா் அங்கு சென்று பாா்த்ததில் சுமாா் ஒன்றரை வயதுள்ள ஆண் சிறுத்தை அழுகிய நிலையில் இறந்துகிடந்தது தெரியவந்தது.
வியாழக்கிழமை புலிகள் காப்பக துணை இயக்குநா் செண்பகப்ரியா தலைமையில் வனச்சரகா் பரத் முன்னிலையில் கால்நடை
மருத்துவா் மனோகரன் தலைமையில் குழுவினா் பிரேதப் பரிசோதனை செய்தனா். இதில், சிறுத்தையின் வயிற்றில்
முள்ளம்பன்றி மாமிசம் இருந்தது தெரியவந்தது. அருகில் மயில் தோகைகள் சிதறிக் கிடந்தது. மேலும் அருகிலுள்ள மின் கம்பியில் சிறுத்தையின் முடி இருந்ததால் மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...