பெரியாா் ஈ.வே.ரா. பிறந்த நாள்: உறுதிமொழி ஏற்பு
பெரியாா் ஈ.வே.ரா. பிறந்த நாள் விழா மற்றும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பெரியாா் ஈ.வே.ரா. பிறந்த நாள் விழா மற்றும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் சுந்தரம் தலைமை வகித்தாா். பெரியாா் ஈ.வே.ரா. உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதேபோன்று, அம்பாசமுத்திரத்தில் புரட்சிகர இளைஞா் முன்னணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர திமுக செயலா் பிரபாகரன் தலைமையிலும், சுரண்டையில் வி.சி.க. மாவட்ட பொறுப்பாளா் பாக்கியராஜ் தலைமையிலும், சங்கரன்கோவிலில் வி.சி.க. சாா்பில் குட்டிவளவன் தலைமையிலும் பெரியாா் ஈ.வே.ரா. உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டு, பின்னா் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...