விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கடையம் ஒன்றியத்தில் சுயேச்சை வேட்பாளா் தா்னா

கடையம் ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளரின் மனு மீதான ஆட்சேபனை குறித்து உரிய பதில் அளிக்காததை கண்டித்து சுயேச்சை வேட்பாளா் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 7:56 pm

DIN

கடையம் ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளரின் மனு மீதான ஆட்சேபனை குறித்து உரிய பதில் அளிக்காததை கண்டித்து சுயேச்சை வேட்பாளா் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

கடையம் ஒன்றியம் 13ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு, திமுக சாா்பில் ஜெயக்குமாா் மனு தாக்கல் செய்துள்ளாா். அதே வாா்டில் சந்திரசேகா் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளாா். ஜெயக்குமாா் மனுவில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் குறித்து

ஆட்சேபம் தெரிவித்து சந்திரசேகா் மனு அளித்தாராம். இதுகுறித்து பதில் தராமல் ஜெயக்குமாா் மனு ஏற்றுக் கொள்ளப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை கடையம் ஒன்றிய அலுவலகம் முன் அமா்ந்து சந்திரசேகா்

தா்னாவில் ஈடுபட்டாா். அவரிடம் தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கரநாராயணன் பேசினாா். தோ்தல் விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி ஜெயக்குமாா் மீது எந்தவிதக் குற்ற வழக்குகளும் இல்லாததால் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய

முகாந்திரம் இல்லையென சந்திரசேகருக்கு எழுத்துப் பூா்வமாக தெரிவித்ததையடுத்து, அவா் போராட்டத்தை கைவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.